பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்_உரைநடை-அ-சீனிவாசன் 123 கவிஞன். பாரதி கவிஞன் மட்டுமல்ல. அவன்தன் காலத்திய சிறந்த எழுத்தாளன், சிறந்த கட்டுரையாளன், சிறந்த கதையாசிரியன், சிறந்த பத்திரிகையாளன், சிறந்த உரையாசிரியன், சிறந்த உரைநடை ஆசிரியன், சிறந்த மனிதாபிமானி, சிறந்த புரட்சிகர ஜனநாயகப் பெரும் புலவன், சிறந்த பண்புமிக்க அரசியல் வாதி, சிறந்த தமிழன், சிறந்த பாரதன், சிறந்த மனிதன், நாற் -பதாண்டு பிராயம், கூட எட்டாத முன்பு பாரதத்தை உலகத்தின் தலைவனாக தனது ஒப்புயர்வற்ற கவிதைகள் மூலம் உயர்த்த முயன்றவன். பாரதி தனது உரைநடைத் தமிழ் மூலம் தமிழ் மொழியின் உரைநடைக்கு ஒரு புதிய அடிப்படையை அமைத்தான். பாரதி தனது சிறந்த தமிழ் உரைநடை மூலம் தமிழனுக்கு உணர்ச்சியூட்டி இருக்கிறான். “தமிழா, தெய்வத்தை நம்பு, பயப்படாதே! உனக்கு நல்ல காலம் வருகிறது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். “தமிழா! கண்ணை நன்றாகத் துடைத்து விட்டு நான்கு பக்கங்களிலும் பார். “தமிழா! பயப்படாதே, ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு உலகத்து சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய். ஒளி, சக்தி, வலிமை, வீரியம், கவிதை, அழகு, மகிழ்ச்சி முதலிய நலன்களெல்லாம் உன்னைச் சார்கின்றன. கலைவாணி உனக்குத் துணையாக இருக்கிறாள், கல்வியும், கலைகளும் உனக்கு வந்து சேரும். மகாலகூலிமி உனக்குத் துணையிருக்கிறாள். உலகத்துச் செல்வங்கள் எல்லாம் உனக்கு வந்து சேரும். உனது நாடு செல்வம் கொழிக்கும் நாடாகப்