பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் B செல்லவில்லை. அவருடைய உரைநடைப் படைப்புகள் மூலம் தமிழ் உரைநடை புதிய மலர்ச்சியையும் மணத்தையும் பெற்றிருக்கிறது. புதிய எழுத்துப் பாரம்பரியத்தை உண்டாக்கியிருக்கிறது. பாரதியின் உரை நடைப் பகுதியில் அவருடைய கட்டுரைகள், கதைகள், பகவத் கீதை தமிழாக்கத்திற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை, அவர் எழுதி வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகளுக்கு எழுதியுள்ள முன்னுரை, விளக்கவுரைகள், அவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ள செய்தித் தொகுப்புகள் கட்டுரைகள், பலவேறு தலைப்புகளில் அவர் எழுதியுள்ள பல தனிக்கட்டுரைகள் கதைகள் அவைகளின் கருத்துகள் ஆகியவை எல்லாம் விரிவாக மக்களிடம் செல்ல வேண்டும். இந்த நூல் அந்த மகத்தான பணியில் ஒரு இம்மித்துளியாக, அணுவில் சதகோடியாகத் திகழுமாயின் நாம் கண்ணன் அருளையும் பாரதியின் ஆசியையும், பெற்றுள்ளோம் என்று பெருமைப்படலாம். பலவேறு தலைப்புகளில் பாரதி எழுதியுள்ள எழுத்துரைகளில், அவருடைய உரைநடையின் சிறப்புக்குச் சான்றாக இந்த நூலில் பல எடுத்துக்காட்டுகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அவைகளைத் தமிழ் மக்கள் தனியாகவும் படித்துப் பயன் பெற வேண்டும். அவைகளின் மூலக்கட்டுரைகளைக் கண்டு அவைகளையும் படித்து பயனடைய வேண்டும், என்றும் அக்கருத்துகளை மக்களிடம் பரப்ப வேண்டிய கடமையை, பாரதிக்கு நாம் அனைவரும் ஆற்றவேண்டிய சேவையாக நிறைவேற்ற வேண்டும், எனவும் வேண்டுகிறோம்.