பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் T25 உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழில் அன்று. மனத்தினால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்கள் எல்லாம், கவிதைகள் எல்லாம், நாடகங்கள் எல்லாம், சட்டங்கள் எல்லாம், வேதங்களெல்லாம், புராணங்கள் எல்லாம், கதைகளெல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதன்றி மனத்தாற் செய்யப் படுவன அன்றோ? எனவே, "அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே’ என்று பாரதி கூறுகிறார். முன்னுரையின் 2-ம் பகுதியில் “எல்லா துயரங்களும் எல்லா அச்சங்களும், எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்கு உண்டாயின் நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால் துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால் நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும் அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்து கொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்னு மயம் ஜகத்” என்பது ஸ்நாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம். எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லா கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும், எல்லாம் ஈசன் மயம், ஆதலால் எல்லாம் ஒன்றுக்கொன்று சமான்ம் - ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்று ஈசாவாஸ் யோபநிஷத் சொல்கிறது. அதாவது “இவ்வுலகத்தில்