பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் 12B ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றதாழ்வு பற்றிய நினைப்புக்களுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவிர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீக்கி நிற்பதே ஞானம், அதுவே முக்திக்கு வழி” என்று குறிப்பிடுகிறார். முன்னுரையின் ஐந்தாம் பகுதியில் "இங்கு தொழில் செய்யும் படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து என்ன மாதிரியாகச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத்தக்கது. “பற்று நீக்கித் தொழில் செய், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி இதுதான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீர வேண்டியதாயிற்றே! நீ விரும்பினாலும் விரும்பா விடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே! எனவே அதை மீட்டு மீட்டுச் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே, அவற்றால் பந்தப்படாதே, வேதனைப் படாதே. இதுதான் முக்கிய உபதேசம். எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்து விட்டு மனச் சோர்வுக்கும், கவலைக்கும், கலக்கத்துக்கும், பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்திற்கும் இடம் கொடாதிரு. “ஸம் சயாத்மா விநச்யதி-ஐயமுற்றோன் அழிவான்” என்று கண்ணபிரான் சொல்லுகிறார்” என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.