பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ. சீனிவாசன் 131 வந்த விடத்தே இத்தனை வேதாந்தமும் இத்தனை சத்வகுணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகா திருக்கவழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றிலர். கூடித்திரிய அரசர் படித்துப் பயன் பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலின் விசேஷ நோக்கம். பூமண்டலத்தார் அனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப் பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும் இந்த நூல் கூடித்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது இது அவர்களுக்குள்ளே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள் எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும் பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ அது போலவே புராணங்கள் கூடித்திரியர்களுக்கு உரியன. மேலும், கீதையைச் சொன்னவன் ராஜா. கேட்டவன் ராஜா. ஆதலால் கூடித்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது இந்நூல் ஞான சாஸ்திரங்களில் முதன்மைப் பட்டிருப்பதைப் போல காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.” என்பதைப் பாரதி மிகவும் உறுதி படக் குறிப்பிடுகிறார். முன்னுரை 9-ம் பகுதியில் ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நிதிகளாகக் கருதப்படும். பிரஸ்தான திரயங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த சூத்திரம் என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்த சில மூடர் மறந்து விடுகின்றனர். இதற்கு, அதாவது பகவத் கீதைக்கு சங்கரர், இராமானு