பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 2. மொழி : மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் மொழி என்பது மனிதனுக்குரிய மிகப் பெரிய செல்வமாகும். மனிதனுக்கே உரிய, மனிதனுக்கு மட்டுமே உரிய தனிச் செல்வமாகும். ஆதி மனிதன் பேசத் தெரிந்தவனாக இல்லை. அவன் படிப்படியாக வாழ்க்கை முறைகளில் வளர்ச்சி பெற்றபோது பேசத் தெரிந்தவனாகவும், மேம்பாடு அடைந்தான். மனிதனுக்கு மனிதன் தங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடுகளையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்து கொண்டபோது மொழிகளின் ஆரம்ப வடிவங்கள் தோன்றியிருக்கின்றன. தொடக்க கால மனிதன் இனக் குடும்பங்களாக வாழ்ந்து, பின்னர் இனக் குழுக்களாக வளர்ச்சி பெற்று அதன்பின்னர் அந்த இனக் குழுக்களும் இணைந்து இனக் கூட்டங்களாக வளர்ச்சி பெற்றுள்ளதாக மனித இன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது பல இனக்குழுக்களின் பேச்சு மொழிகளும் இணைந்து இனக் கூட்டமொழிகளாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆதிமனிதன், காடுகளிலும் மலைகளிலும், கடலோரங்களிலும் வாழ்ந்தபோது, கல்லும் கம்புமே அவர்களுடைய உற்பத்திக் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் இருந்த போது உணவு சேகரித்தலும் வேட்டையாடுதலும், மீன் பிடித்தலுமே முக்கியத் தொழில்களாக இருந்தபோது, இனக் குழுக்கள் சமுதாயங்களாக வாழ்ந்து வந்தனர். இராமாயணத்தில் வரும் வாணர இனமக்கள் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தார்கள். அவர்களுடைய கருவிகளும், ஆயுதங்களும் கல்லும், கம்புமாகவே இருந்தன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலத்தை நால்வகையாகப் பிரித்தும் அவைகளில்