பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில்-பாதியின்_உரைநடை-அ-சீனிவாசன் 135 மிருகங்களை வைத்துக் கொண்டு அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும், எளிதென்றேனும், கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை பண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும் மூடராயினும் புலி, கரடி, ஓநாய், நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்தல் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால் “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும் புலி வாழும் காடு நன்றே" என முன்னோர் குறிப்பிட்டபடி கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகக் கஷ்டமாக்கக் கூடிய மனிதரும் இருக்கக் கூடும் என்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது. பொது விதியை ஸ்தாபகம் செய்வதாகிய விதி விலக்கென்றே கருதத்தகும்.” என்று பாரதியார் குறிப்பிடுகிறார். அதே பகுதியில் பாரதியார், இல்லறம், துறவறம் பற்றி மேலும் விவரிக்கிறார். துறவறம் சிறந்தது என்று பாரதியார் ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லறமே சிறந்தது என்பது அவருடைய கொள்கை. "இல்லற மல்லது நல்லற மல்ல” என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பவர். அதனால் பகவத் கீதை ஒரு சந்நியாச நூல் என்று கூறப்படும் கருத்தை மறுத்து அவர் வாதாடுகிறார். அதற்காக இல்லறம், துறவறம் ஆகிய இரண்டையும் சமநிலையில் கண்ட தாயுமான ஸ்வாமி கூறிய "மத்தமதகளி முகிற் குலமென்ன” என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி அப்பாடலுக்குத் தனது உரைநடையில் பொருள் கூறுகிறார். அது வருமாறு : “மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல மலிந்து நிற்கும் வாயில்களையுடைய அரண்மனையில் சந்திரனை