பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்_உருை_அ. ്fിഖre് 139 "இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது” என்று பாரதி கூறி முடிக்கிறார். பாரதியின் உரைநடைக்கு எடுத்துக் காட்டாக இங்கு அவர் தன்னுடைய பகவத் கீதை தமிழாக்கத்திற்கு எழுதியுள்ள முகவுரையின் பகுதிகளை சற்று விரிவாகவே கூறப்பட்டிருக்கிறது. பாரதியின் உரைநடையில் இந்தப் பகுதி மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும், மிகவும் கடினமான விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய முறையிலும் அமைந்திருக்கிறது. பகவத் கீதையின் கருத்துக்களின் உண்மைகளையும், வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்த தத்துவ ஞானம் பற்றிய பல உண்மைகளையும் பாரதி தனது பகவத் கீதை தமிழாக்கத்திற்கான முன்னுரையில் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியிருப்பதாலும், பாரதி காலத்திய தமிழ் உரைநடைக்கு இந்த பாரதியின் உரைநடைப் பகுதி ஒரு தனி இலக்கியமாக சிறப்புற அமைந்திருப்பதாலும் இந்த நூலில் மிகவும் விரிவாகவே இந்தப் பகுதியிலிருந்து இங்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் பாரதியின் தமிழ் உரைநடைப் பகுதியைப் பற்றியும் குறிப்பாக பகவத் கீதை தமிழ் மொழி பெயர்ப்புக்கான இந்த முன்னுரையின் தனி இலக்கியச் சிறப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்னும் நோக்கத்துடனும், இப்பகுதியில் உள்ள வாசகங்கள் சற்று விரிவாகவே இங்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. பகவத் கீதை பற்றி பாரதியின் கருத்துக்கள் விளக்கங்கள், மூல நூலுக்கு அவர் செய்துள்ள தமிழாக்கம் ஆகியவை தனித் தன்மையும் சிறப்பும் கொண்டிருக்கின்றன. அத்துடன் இந்தப் பகுதியில் காணப்படும் அவருடைய தமிழ் உரைநடையும் மிகவும் சிறப்பாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ளது.