பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20-பாதியின்_பகவத்-கீதை_தமிழாக்கம் 140 பாரதி ஒரு மகாகவிஞன். சிறந்த எழுத்தாளர். பாரதப் பண்பாட்டு நிலையில் வேர் ஊன்றி நின்றவர். தமிழும் சமஸ்கிருதமும் நன்கு அறிந்தவர். வேதங்களையும் உப நிடதங்களையும் அறிந்தவர். அவர் ஒரு மகாஞானி, கர்மயோகி, ஜீவன் முக்தர், பாரத தத்துவ ஞான சிந்தனையை, வேதாந்தத்தை நன்கு அறிந்து கொண்டவர். அவருடைய தெளிவான சிந்தனையும் அதிலிருந்து வெளிப்படும் கருத்துகளின் உண்மை நிலையும் அவருடைய தமிழும் தமிழ்ப் பற்றும் இணைந்து இந்த உரைநடைப் பகுதியில் மிகவும் சிறப்பாக வெளிப்படுகிறது.