பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 141 21. நிறைவுரை பாரதியின் கவிதைகளைப் போலவே அவருடைய உரைநடைப் பகுதிகளும் பல தலைப்புகளையும், பல புதிய கருத்துக்களையும், கருத்து வடிவங்களையும், பல பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள பாரத சமுதாயத்தில் உள்ள தமிழ் நாட்டில் உள்ள பலவேறு சமுதாயப் பிரச்னைகள், அரசியல் பிரச்னைகள், தேச விடுதலை, பொருளாதாரப் பிரச்னைகள், சமூக சீர்திருத்தம், பெண்கள் விடுதலை தொடர்பான பல பிரச்னைகள், மொழி வளர்ச்சி, தமிழ் இசை, சங்கீதம், சங்கீத வித்வான்கள், மக்களுடைய பாடல்கள், கல்வி, கல்வி வளர்ச்சி, நாட்டுக் கல்வி, தேசியக் கல்வி, பத்திரிகைகள், செய்திகள், மொழி பெயர்ப்புகள், அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் மகாநாடுகள், கூட்டங்கள், மதம், மத நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், இந்தியப் பண்பாடு, இந்திய மரபுகள், இந்தியப் பேரிலக்கியங்கள், புராணங்கள், கதைகள், ஆடல் பாடல், கூத்துக்கள், நாட்டியம், அபிநயம், நவரசம், சமூக சேவை, தத்துவஞானம், வேதங்கள், உபநிடதம், வேதாந்தம், பகவத்கீதை இவ்வாறு இன்னும் பல தலைப்புகள் பிரச்னைகளைப் பற்றித் தனது உரைநடைக் கட்டுரைகளில் பாரதி எழுதியுள்ளார். அத்துடன் அவர் சுதேச மித்திரன் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகள், செய்திகள், மொழி பெயர்ப்புகள், நாட்டு நடப்புகள், பாரதி நடத்திய பத்திரிகைகள், இந்தியா, விஜயா, கர்மயோகி, சக்கரவர்த்தினி, சூரியோதயம் முதலியவற்றில் அவர் எழுதிய கட்டுரைகள், செய்திகள், தலையங்கம், ஆகியவைகளில் அவர் எழுதியுள்ளவைகளின் தமிழ் உரைநடை மிகவும் சிறப்பான