பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மொழி: மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் 10 வாழ்ந்து வந்த மக்களையும் நால்வகையாகப் பிரித்தும் அவர்களுடைய தொழில்களையும், பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் பிரித்து விளக்கிக் கூறியிருப்பதையும் காண்கிறோம். * அவ்வாறு ஆரம்பகால மக்கள் இனக்குழுக்களாகக் கூடி வாழ்ந்தபோது இனக்குழு மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. அந்தப் புராதன சமுதாய மக்கள் தங்களுடைய சமுதாய வளர்ச்சியைத் தொடர்ந்து ஆடுமாடு மேய்த்தல், கால் நடை பராமரித்தல், அவை தொடர்பான தொழில்கள் பலவற்றிலும் ஈடுபட்டு சமுதாய செயல்பாடுகளும் மனிதத் தொடர்புகளும், கூட்டுத் தொழில்களும் விரிவடைந்தன. காலப் பயணத்தில், நதி ஒரங்களையும், புல்வெளிகளையும் மக்கள் தேடிச் சென்ற போது பல இனக்குழுக்களும் சந்தித்து இணைந்தபோது, அவ்வினக் குழுக்கள் இணைந்து ஒன்றிணைந்த இனக் கூட்டங்களாக உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கின்றன, விரிவடைந்திருக்கின்றன. அப்போது அந்த இனக்குழுக்களின் மொழிகள் இணைந்து இனக் கூட்ட மொழிகளாக ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்றுப் புதிய மொழி வடிவங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி வடிவங்களாக அம்மொழிகள் வளர்ச்சி பெற்றுத் தொடக்க கால மொழி இலக்கியங்களும் தோன்றியிருக்கின்றன. அந்தப் பண்டைய இலக்கியங்கள் வாய்மொழி வழியாக வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக, ஒருதலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டு மனப்பாடமாகத் தொடர்ச்சியாக வளம் பெற்று சமுதாயத்தில் நிலைபெற்றிருக்கிறது. இந்த ஆரம்ப இலக்கியங்கள், ஒவ்வொரு தலைமுறையின் போதும், மேலும் செழுமையும் வளமும் பெற்று