பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றி 148 இந்தியாவில் பொதுத்துறைக்கும் தனியார் துறையில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கும் இடையிலான உறவு என்னும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்து, அது உலக தொழிற் சங்க ஆவணத்தில் பதிவாகியுள்ளது. பத்திரிகையாளராக தொழிற் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் தொழிற் சங்கச் செய்தி ஹார்பர் தொழிலாளி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். கட்சியின் மாநிலத் துணைத் செயலாளராக இருந்த போது கட்சியின் மாநில அமைப்பு நிலைப் பொறுப்பில் இருந்த காலத்தில் கட்சியின் பத்திரிகையான ஜன சக்தி வார இதழ் மற்றும் நாளிதழ்களில் தலைமை ஆசிரியராக எட்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் சித்தாந்த ஏடான மார்கசீய ஒளி மாத இதழின் தலைமை ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். எழுத்துப் பணிகளில் பத்திகை ஆசிரியராக இருந்த காலத்தில் கட்சி மற்றும் தொழிற் சங்கப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பல முக்கிய அரசியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் தத்துவ ஞானம் மற்றும் தொழிலாளர், விவசாயிகள் பற்றியப் பிரச்னைகள் பற்றிய பல கட்டுரைகள் எழுதி வந்ததுடன், அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவஞானம், சர்வதேசப் பிரச்னைகள் முதலியவை பற்றிய பல தலைப்புகளிலான நூல்களை மொழி பெயர்ப்பு (தமிழாக்கம்) செய்தும், மூல நூல்கள் எழுதியும் அவை வெளியாகியுள்ளன. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, மார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்னைகள் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள், ஐக்கிய