பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாதியின் உரைநடை-அடசினிவாசன் 11 வளர்ச்சி பெற்றுப் பேரிலக்கியங்களாக நிலை பெற்று நின்றிருக்கின்றன. அத்தகைய பல இலக்கியங்களின் வளர்ச்சியை ஒட்டி அந்தந்த இனக் கூட்ட மொழிகளும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன, மேம்பாடு அடைந்திருக்கின்றன. அக்கால இலக்கியங்கள், மக்கள் பேசும் மொழிகளில், எளிய பதங்களில், எளிய வழிமுறையிலான கவிதைகள், பாடல்கள் கண்ணிகள் ஆகிய வடிவங்களில் அமைந்து மக்களின் உள்ளங்களில் இடம் பெற்று, மனப் பாடங்களில் நிலை பெற்று வளர்ச்சியடைந்திருக்கின்றன. இனக் கூட்டங்கள் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டும் கால் நடைகளைப் பராமரித்துக் கொண்டும் காலப் பயணத்தில் தண்ணிர் வசதிகளும், புல்வெளிகளும் அதிகமாக உள்ள இடங்களை நோக்கி நகர்ந்து சென்ற போது மீண்டும் பல மனிதக் கூட்டச் சந்திப்புகளும், சேர்க்கைகளும், இணைப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. மனித சமுதாயங்களின் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் ஒட்டி ஆற்றோரங்களிலும், மலையடிவாரங்களிலும், கடலோரங்களிலும் மனித இனக் கூட்டங்களின் ஒன்றிணைந்த சமுதாயங்கள் நிலைபெறத் தொடங்கின. ஆடுமாடுகள் மேய்த்தல், கால்நடை பராமரித்தல், மீன் பிடித்தல், பின்னர் சிறிய அளவிலும், படிப்படியாகப் பெரிய அளவிலும் சாகுபடித் தொழில், அவைகளைத் தொடர்ந்து அவை தொடர்பான கைவினைத் தொழில்களும் வளர்ச்சி பெற்று மனித நாகரிகம் புதிய கட்டங்களை எட்டியிருக்கின்றன. மனித சமுதாயத்தின் இவ்வாறான வளர்ச்சியில் புதிய உற்பத்தி சக்திகளும், உற்பத்தி சாதனங்களும், உற்பத்திக் கருவிகளும்