பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 13 வெளிநாட்டு வாணிபம், நகர அமைப்புகள், மக்களின் வளம், ஏராளமான பொருள்கள் நிறைந்த அங்காடிகள் கடைவீதிகள், பலவகையான தொழில் உற்பத்திப் பொருள், விவசாயம், பால் உற்பத்தி, ஆபரணத் தொழில்கள், ஆலயங்கள், வழிபாடுகள், அரசு, அரசியல் நிர்வாகம், உள்நாட்டு வாணிபம், ஆடல் பாடல், நாட்டியம், பலவகை சிறப்பு மிக்க கூத்துகள், இசை, இசைக் கருவிகள், இலக்கியம், கவிதைகள் இன்னும் இவ்வாறான தமிழகத்தின் சிறப்புகளை அறிய முடிகிறது. ஆடுமாடு மேய்த்தல், கால் நடைபராமரித்தல், சாகுபடி மற்றும் பாசன மேம்பாடு, மீன் பிடித்தல் மற்றும் கடல் சார்பு தொழில்கள் கப்பல் கட்டுதல், நெசவுத் தொழில் மற்றும் இதர பலவகை கைவினைத் தொழில்கள், வாணிபம், சமுதாய நிர்வாகம், ஆலயங்கள், திருவிழாக்கள், ஆட்சி, அரசியல் நிர்வாகம், நீதி, சட்டம், காவல், தண்டனை நிர்வாகம் பற்றிய இலக்கியங்களையும் தமிழ் பூமி வளர்த்துள்ளது. நாட்டின் பொதுச் செல்வத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது "நிலம் தருதிருவும், கலம் தருதிருவும்” என்று சிலப்பதிகாரக் காப்பியம் குறிப்பிடுகிறது. கம்பன் தனது இராமாவதாரப் பெருங்காவியத்தில் கோசல நாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது “கலம் சுரக்கும் நிதியம் கணக்கிலா நிலம் கரக்கும் நிறைவளம் நன்மனியிலம் சுரக்கும் பெறுதற்கு அரியதம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம் என்று கூறுகிறார். கம்பன் இவ்வாறு கூறும்போது தமிழகத்தையும் பாரதத்தையும் மனதில் வைத்தே கூறுகிறார். கலம் சுரக்கும் நிதியம் என்பது கடல்வளம், கடல் வாணிபம் மூலம் வரும் வளம் ஆகியவைகளாகும். நிலம் சுரக்கும் நிறைவளம், என்பது நீர், சாகுபடி, காடுகள், மலைவளம் தோட்டங்கள், துரவுகள், கால் நடைவளம், பால்வளம்,