பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-மொழி-மொழிகளின்-தோற்றமும்-வளர்ச்சியும் 14 தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள்வளம் முதலிய முதல்நிலை உற்பத்தி அனைத்தும் அடங்கும். பிலம் என்பது சுரங்கம், நன்மணியிலம் சுரக்கும் என்பது கரங்கங்கள் மூலம் கிடைக்கும், உலோகவகை தங்கம் வெள்ளி வைரம் முதலியனவாகும். குலம் சுரப்பது மனித வளம். உழைப்பு அறிவாற்றல், ஒழுக்கம், கடமையாற்றல் முதலிய பலமுக திறன் படைத்த வற்றாத மனித வளத்தைக் கொண்டிருக்கிறது பாரத நாடு என்று இந்தக் கவிதை பொருள்படுகிறது. எத்தனை அரிய உயரிய கருத்துகளை இந்தப் பாடல்வரிகள் எடுத்துக் கூறுகின்றன? இந்த வகையில் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும், செம்மொழிச் சிறப்புடன் உலக மொழிகளில் முக்கிய மொழியாக இடம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் மொழி பன்னாட்டு மொழிகளில் ஒன்றாக விரிவுபட்டு உலகின் பல நாடுகளிலும் பரவி இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு பண்டைய காலத்திலும் மத்திய காலத்திலும் எல்லா மொழிகளின் இலக்கியங்களும், கவிதை மற்றும் பாடல் வடிவங்களிலேயே வெளிவந்து நிலை பெற்றிருக்கின்றன. பிற்காலத்தில் தோன்றி வளர்ச்சி பெற்ற ஆங்கில மொழியில் கூட உலகப் புகழ்பெற்ற சேக்ஷ்பியர் நாடகங்களும் மில்டனின் படைப்புகளும் கவிதை வடிவில்தான் வெளிவந்தன். எழுத்து, எழுத்தாணி, ஏடுகள், சுவடிகள், பனைஒலைக் கட்டுகளில் சீரும் சிறப்பும் மிக்க தமிழ் இலக்கியங்களும்,