பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

అ வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 15 காவியங்களும் காப்பியங்களும் இதர பல அறிவியல் தத்துவம், மருத்துவம், மற்றும் பல அருங்கலை நூல்களும் பலவகைக் கவிதை வடிவங்களில்தான் இடம் பெற்று மக்களிடம் பரவியிருந்தது. கவிதை வடிவங்கள் மனப்பாடம் செய்து கொள்வதற்கு எளிதானது. அவைகளைப் படித்து விளக்குபவர்களும் பாராயணம் செய்பவர்களும் மனப்பாடம் செய்து கொள்பவர்களும் மற்றவர்களுக்குப் பாடம் போதிப்பவர்களும் சிலரே இருந்தனர். உரைநடை என்பது செப்பேடுகள், அரசர்களின் ஆணைகள் கீர்த்திகள், ஆகியவைகளிலேயே இடம் பெற்றிருந்தன. கவிதை வடிவங்கள் என்பது சமுதாய வளர்ச்சியின் குறிப்பிட்ட வாழ்க்கைச் சாதனங்கள் மற்றும் கருவிகளின் வளர்ச்சி கட்டத்தைச் சார்ந்து உருவாகி நிலைபெற்றிருந்தன. கவிதைகள் (செய்யுள் வடிவம்) சுருங்கக் கூறிவிரிந்த பொருளைத் தரத்தக்கது. சூத்திரங்கள், ஈரடிக் குறட்பாக்கள், நாலடிப்பாக்கள், விருத்தப் பாக்கள், வெண்பாக்கள் மற்றும் பல வடிவங்களில் கவிதைகள், பாசுரங்கள், பாடல்கள் வடிவங்களில் இலக்கியங்கள் தோன்றின. அவைகளுக்கு, அதாவது அத்தகைய மூல நூல்களுக்கு தனியான உரைநூல்களும் எழுதப்பட்டிருந்தன. மற்றும் விளக்கவுரைகள், விரிவுரைகள் மூலம் தனியான வல்லுனர்களால் உரை ஆசிரியர்களால் விளக்கப்பட்டன. பிரவசனம் செய்யப்பட்டன. பாரதநாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கல்வி முறையும் பரம்பரை பரம்பரையாக குருகுல அடிப்படையில் அமைந்திருந்தன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை ஒட்டியே கல்வி சாதனங்களும் அமைந்து மொழியும் இலக்கியங்களும் சாத்திரங்களும், உருவாகி