பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மொழி: மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் 15 வளர்ச்சி பெற்றிருந்தன. அதே சமயத்தில் பாரத நாட்டில் மிகவும் எளிமையான கருவிகள் சாதனங்களைக் கொண்டே மிகப் பெரிய அளவில் இசையும் இலக்கியங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாரதர், தும்புரு போன்ற இசை ஞானிகள் ஒப்பு உயர்வு நிறைந்தவர்கள். அவர்களுடைய இசை ஞானத்திற்கு உலகில் ஈடு இணையே இல்லை. தியாகப் பிரம்மம், அன்னமாச்சாரியார் மற்றும் நமது இசை மேதைகளுக்கு ஈடு இணையே இல்லை. மிகவும் உயர்வான மிகவும் மேலான உயர்ந்த சங்கீத மேதைகள். மிகவும் சிறிய சாதாரண இசைக் கருவிகளைக் கொண்டே அவர்கள் நமது இசையை உயர்த்தினார்கள். இதே போல பாரத நாட்டின் தலை சிறந்த அறிவியல் மேதைகள், ஞானிகள் எளிய முறையிலான கருவிகளைக் கொண்டே அரிய சாதனைகளைச் செய்து முடித்திருக்கிறார்கள். அதேபோல நமது குருகுலக் கல்வி முறையில் மிகவும் எளிமையான சாதனங்களைக் கொண்டே மிக உயர்ந்த கல்வியைக் கொடுத்திருக்கிறார்கள். பண்டைய கிரேக்க இதிகாசங்கள், கிரேக்க, லத்தீன் மொழிக் கதைகள், காவியங்கள் சாத்திரங்கள், அறிவியல் இலக்கியங்கள் ஆகியவைகளின் அடிப்படையில் அவைகளை மூலமாகக் கொண்டு ஐரோப்பிய இலக்கியங்களும் தத்துவங்களும் சாத்திரங்களும் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பாரதநாடு அறிவுத்துறையில் மிகப் பண்டைய காலத்திலிருந்து உலகின் முன்னணியில் இருந்தது. சகல துறைகளிலும் கல்வியில் வளர்ச்சி பெற்றிருந்தது. ஊர்தோறும் இன்னும் தெருக்கள் தோறும் கூட குருகுலங்களும் திண்ணைப் பள்ளிக் கூடங்களும் நடைபெற்றும் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். பல மிகப் பெரிய பல்கலைக் கழகங்களும் சிறப்புற்று விளங்கின. அப்பல்கலைக் கழகங்களில்