பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை - அ. சீனிவாசன் 17 பாரதம் முழுவதிலிருந்தும் இன்னும் உலகின் பலநாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்ந்து கல்வி பயின்றனர். பாரதத்தின் பல மொழிகளும் வளர்ச்சி பெற்றிருந்தன. அவைகளில் சமஸ்கிருதமும், தமிழ் மொழியும் முக்கிய இடம் பெற்றிருந்தன. பாரத நாட்டின் மொழிகள், இலக்கியங்கள், தத்துவங்கள் மற்றும் இதர சாத்திரங்கள் முதலியவைகளின் வளர்ச்சியில் வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி சாத்திரங்கள், தர்ம சாத்திரங்கள், அர்த்த சாத்திரங்கள், அறிவியல் சாத்திரங்கள், அறநூல்கள், தத்துவ சாத்திரங்கள், வைத்தியம் மற்றும் மருந்தியல் நூல்கள், சிற்ப சாஸ்திரங்கள், கணிதம், காலக் கணித நூல்கள், முதலியவை வடமொழியில் உருவாகி வளர்ச்சி பெற்று இந்திய மொழிகள் அனைத்திலும் பரவி பரஸ்பரம் செல்வாக்கினைச் செலுத்தி பாரதத்தின் அத்தனை மொழிகளின் பொது வளர்ச்சிக்கு உதவியுள்ளன. இதில் தமிழ் மொழி, வடமொழிக்கு ஈடாக மொழி வளமும், இலக்கிய வளமும், இலக்கண வளமும் சாத்திர வளமும் பெற்று சங்க நூல்கள், அறிவியல் நூல்கள், சிற்ப சாத்திர நூல்கள், கணிதம் மற்றும் காலக்கணித நூல்கள் அறநூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், வில்லி பாரதம் தத்துவ ஞான நூல்கள், இசை மற்றும் ஆடல் பாடல் பற்றிய நூல்கள், வைத்திய நூல்கள் முதலியவைகளில் தனித் தன்மையுடன் வளர்ச்சி பெற்று இதர இந்திய மொழிகளுடன் பரஸ்பரம் செல்வாக்கைச் செலுத்திச் செழுமை பெற்றுள்ளது. கம்பன் தனது இராமாவதாரக் காவியத்தில் இராமனைப் பற்றிக் குறிப்பிடும்போது "தென்சொல் கடந்தான், வட சொல்கலைக்கு எல்லை தேர்ந்தான்” என்று இராமனை இருமொழிகளிலும் வல்லவன் என்று குறிப்பிடுகிறார். மேலும்,