பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மொழி: மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் 1B "ஆரியம் முதலிய பதினெண்பாடையில் பூரியர் ஒரு வழிப்புகுந்ததாம் என ஒர்வில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில சோல்வில விளம்பு புவிது வன்றுகின்றது” என்று கம்பன் குறிப்பிடுகிறார். பாரதியோ, “ விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி, வேண்டிய வாறுனைப் பாடுதும் காணாய்” என்றும், "செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்றும் பாடுகிறார். இந்திய இலக்கியங்களின், பலவேறு சாத்திரங்களின், தத்துவங்களின், தத்துவ ஞானங்களின், அறிவுத்துறைச் செல்வங்களின், புத்த ஜாதகங்களின் தொடர்பையும் இணைப்பையும் பரஸ்பரம் செயல்பாட்டையும், செல்வாக்கு செலுத்தலையும், அவைகள் மூலம் நமது மொழிகளின் வளர்ச்சி பற்றியும், தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலரும் எடுத்துக் கூறியுள்ளதைக் காண்கிறோம். சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் மற்றும் சாத்திரங்களுக்கு இதர மொழி அறிஞர்களும் வல்லுனர்களும் தங்கள் பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக ஆதிசங்கரர் தனது நூல்கள் பலவற்றையும் பொது மொழியான வடமொழியிலே எழுதினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிற்ப சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் பற்றி தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் பல நூல்களும் இருந்து வந்திருக்கின்றன. அதில் பலரும் பங்கு கொண்டிருந்தனர் என்று இன்றைய சிற்ப சாஸ்திர மேதை கணபதி ஸ்தபதியார் கூறுகிறார்.