பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3-எழுத்தும்-சொல்லும் 2U “எல்லையொன்றின்மை என்னும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சி என்று பாரதி கம்பனைக் குறித்துக் குறிப்பிடுவதைக் காணலாம். சொற்கள் எந்த மொழியிலும் அந்த மொழியின் எழுத்துகளின் சேர்க்கையால் உண்டானது மட்டுமல்ல. அந்த சொற்களுக்கு அவைகளுக்குரிய பொருளும் கருத்துகளும் கருத்தமைவுகளும் கருத்து வடிவங்களும் அமைகின்றன. இவையெல்லாம் நீண்ட மொழி ஆராய்ச்சிக்கு உரியனவாகும். கம்பனுடைய மகாகாவியத்தில் ஏராளமான பல புதிய சொற்கள் காலத்திற்கேற்றவாறும், நீண்ட எதிர் காலத்திற்குப் பொருந்தும் முறையிலும் வடிவப்பட்டு வந்திருக்கின்றன. அவர் கையாண்டுள்ள பல சொற்களுக்குப் புதிய விரிவான பொருளும் வந்திருக்கிறது. புதிய கருத்துக்களும் கருத்தமைவுகளும், கருத்து வடிவங்களும் கொண்ட சொற்களும் வந்திருக்கின்றன. அவைகளுக்குக் காலத்திற்கேற்றவாறு விளக்கங்களும் வியாக்யானங்களும் விரிவுரைகளும் வளர்ந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக உலகு, உலகம் என்னும் சொற்கள் தமிழ் மொழியின் வடிவம் பெற்று தமிழ் மொழியில் இணைந்திருக்கிறது. ஆயினும் அந்த சொற்களின் பொருள் காலத்தாலும் இடத்தாலும் விரிவடைந்து கொண்டே வந்திருக்கிறது. தமிழ் புலவர்களும், கவிஞர்களும், இலக்கியப் படைப்பாளர்களும் உலகு, உலகம் என்னும் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதில் அவர்களுடைய பொதுமை நோக்கம் வெளிப்படுகிறது. புறநானூற்றுப் பாடல்கள் உலகை இயற்கையின் வடிவமாகவே காண்கிறது. "மண் திரிந்த நிலனும், நிலம் ஏந்திய