பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.-எழுத்தும்-சொல்லும் 22 “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்னும் பெருமைக்குரிய திருக்குறளின் முதற்பா, தொடக்கத்தில் எழுத்தெல்லாம் அகரத்திலிருந்து தொடங்குவதைப் போல உலகமெல்லாம் ஆதி பகவனிடமிருந்து தொடங்குகிறது என்றோ அல்லது உலகமெல்லாம் ஆதிபகவனிடமிருந்து தொடங்குவதைப் போல எழுத்தெல்லாம் அகரத்திலிருந்து தொடங்குகிறது” என்றும் கொள்ளலாம். உலகத்திலுள்ள அனைத்து மொழிகளிலும் எழுத்துக்கள் அகரத்திலிருந்தே தொடங்குகின்றன. இதில் நமது குறிப்பு உலகம் என்பது பற்றியதாகும். அந்த உலகு ஆதி பகவனிடமிருந்து தொடங்குகிறது என்பது வள்ளுவர் வாக்கு. இங்கும் உலகு என்பது அனைத்தளாவிய பொருளின் கருத்து வடிவத்திலேயே குறிப்பிடப்படுகிறது. இனி கம்பன், “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும்” என்று குறிப்பிடுகிறார். இங்கு உலகத்தில் உள்ள பொருள்கள் அனைத்தின் செயல்பாட்டினையும் நிலைபாட்டினையும் கம்பர் குறிப்பிடுகிறார். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் இடைவிடாத இயக்கத்தில், மாற்றத்தில், மேல் நோக்கிய வளர்ச்சியில், தோன்றியும் நிலைபெற்றும், நீங்கியும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்னும் கருத்தமைவு புலப்படுகிறது. இங்கு உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் தோன்றி நிலைபெற்று பழயநிலையிலிருந்து நீங்கி புதிய நிலைக்கு இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். இங்கு உலகும், உலகத்தின் அனைத்துப் பொருள்களும் அவைகளின் நிகழ்ச்சிகளும் அவைகளின் இடைவிடாத பிறப்பும் தோற்றமும், இருப்பும் வளர்ச்சியும் மாற்றமும் கொண்ட ஒரு அற்புதமான காட்சியைக் கம்பன் நமக்குக்