பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை - அ. சீனிவாசன் தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை முன்னுரை: மகாகவி பாரதியின் படைப்புகளில் அவருடைய கவிதைகளைப் போலவே அவருடைய உரைநடைப் பகுதிகளும் மிகவும் முக்கியமானவை. கருத்துக்களில் மட்டுமல்ல, மொழி, நடை, விஷயங்களை எடுத்துக் கூறும் வழிமுறை, எளிமை, கருத்து வேகம், கருத்தாழம், தெளிவு, சொல் கூர்மை ஆகிய பல அம்சங்களிலும் புதுமை கொண்டிருக்கிறது. “கூடியவரை, பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி” என்று வசன நடைபற்றி பாரதி குறிப்பிடுகிறார். வசனநடை என்பது தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்கவேண்டும் என்றும் பாரதி குறிப்பிடுகிறார். இவ்வாறு உரைநடை பற்றி பாரதி குறிப்பிடும் கருத்துக்கள் அற்புதமானவை. பாரதிக்குப் பின்னர், தமிழ் உரைநடை பிரவாகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. பத்திரிகைகள் பாடநூல்கள், கதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி, அச்சு எந்திரம் தனிநபர் முயற்சிகள் முதலியன அதற்கு முக்கிய கருவிகளாக இருக்கின்றன. பாரதி தன்னுடைய கட்டுரைகளில் மொழி நடைமட்டுமல்ல, கருத்துக்களும் சிறப்பு கொண்டவைகளாக எடுத்துக் கூறுகிறார். ஆயினும் அவை மக்களிடம் விரிவாகச் சென்று போதுமான அளவில் பிரபலமடையவில்லை. அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலிருந்து பாரதியின் உரைநடையில் மொழி, அரசியல், சமுதாய சீர்திருத்தம் ஆகியவை