பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

рымфомолу ампазыбну шплёмбія =яльное — эі. சீனிவாசன் 27 அந்த மணம், அதாவது, முளையின் சாரமாக உள்ள மணம் அந்த விதையின் முளை முளைத்து செடியாகி மரமாகி பூ பூத்து காய் காய்த்து அந்தக் காய்கள் பழமாகும் போதும் நமது மூக்கைத் துளைக்கிறது. அந்தப் பழத்திலுள்ள கொட்டையிலும் அந்த மணம் தொடருகிறது. கொட்டையிலிருந்து, முளை, செடி, மரம், பூ, காய், பழம், மரத்தின் பட்டை, வேர், இலை, அனைத்திலும் அந்த மணம் நிரம்பியிருக்கிறது. அது மாவினத்தின் சாரம். வேம்பின் விதையில் உள்ள கசப்பு நோய்தீர்க்கும் மருந்து. கசப்பு வேம்பின் சாரம். வேம்பின் விதை முளைத்து செடியாகி மரமாகி, பூத்து, காய்த்து பழங்களையும் கொட்டைகளையும் தருகிறது. வேம்பின் விதையில் உள்ள அதன் சாரமான கசப்பு, வேப்ப மரத்தின் அத்தனை பகுதிகளிலும், செடி, மரம், பூ, காய், பட்டை, வேர், பிசின், இலை, கொளுந்து, ஆகிய அனைத்திலும் கசப்பு உள்ளது. செம்மையான, மா, வேம்பு, மற்றும் பல தாவரங்கள் ஆகியவற்றில் அதனதன் குணம், இயல்பு, சாரம் ஆகியவற்றைச் சீராகக் காண்கிறோம். செம்மையான மனிதர்களும் உண்டு. அம்மனிதர்களில் ஒருவன்தான் பரதன். ஆனால் அப்பரதன் இராமனிலும் சிறந்தவன் என்று இராம காதை கூறுகிறது. நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு, இன்னும் கோடி இராமர்களுக்கு ஈடானவன். அதற்கும் மேலானவன். என்று கம்பர் கூறுகிறார். மனிதச் செம்மையின் குணம், இயல்பு, சாரம் அனைத்தும் பரதனுடைய குணத்தில் இயல்பில், சாரத்தில் கெட்டிப்பட்டு வலுவாக வைரம் பாய்ந்து நிற்பதைக் கம்பன் செம்மையின் ஆணி,