பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உனழுத்தும்டசொல்லும் 28 நன்கு விளைந்து பக்குவப்பட்ட செம்மை குணம் என்று குறிப்பிடுவது சிறப்பாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். செம்மையின் ஆணி என்னும் சொற்றொடர், கம்பனுக்கும், கம்பராமாயணப் பெருங்காவியத்திற்கும் தமிழுக்கும் தமிழ்ச் சொல்வளத்திற்கும், பெருமை சேர்க்கிறது. செம்மையின் ஆணி என்னும் தலை சிறந்த சொற்றொடருக்கு முழு விளக்கம் கொடுக்க அச்சொற்றொடரின் முழு பரிமாணத்தையும், பொருளையும் எடுத்துக் காட்ட அக்கம்பனே தான் வரவேண்டும். அகத்தியனைப் பற்றிக் குறிப்பிடும்போது, “தமிழ் என்னும் அளப்பரும் சலதி தந்தவன்” என்று கம்பர் கூறுகிறார். இங்கு தமி ழை அதன் சொல்வளத்தை பெருங்கடலுக்குக் கம்பர் ஒப்பிடுகிறார். இன்னும் நீண்ட தமிழால், உலகை நேமியின் அளந்தான் என்றும், அகத்தியரைப் பற்றிக் கம்பர் குறிப்பிடுகிறார். திருமால் வாமனனாக வந்து திரிவிக்கிரமனாகப் பேருருவம் எடுத்துத் தனது நீண்ட திருவடிகளால் உலகையே அளந்ததைப் போல அகத்தியன் நீண்ட தமிழால் (தமிழ் மொழியின் சொல்வளத்தால்) உலகை அளந்தவன் என்று குறிப்பிடுகிறார். திருமால் அவதாரத்தின் நீண்ட திருவடிகளுக்கு அகத்தியனுடைய நீண்ட தமிழ் ஒப்பிடப்படுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும், “எண்திசையும், ஏழ் உலகும் எவ்வுயிரும் உய்யக் குண்டிகையினில் பொருவில் காவிரி கொணர்ந்தான்” என்றும், “என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்” என்றும், தமிழ் தந்த அகத்தியனைப் பற்றியும் அவன் தந்த தமிழின் சிறப்பு பற்றியும் கம்பன் குறிப்பிடுகிறார். தமிழ் தந்த அகத்தியன் என்று கம்பன் அகத்தியர் பெருமானைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அகத்தியரைப் பற்றி