பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அடசினிவாசன் 29 அதாவது தமிழ் தந்த அகத்தியரைப் பற்றி மேலும் முக்கியமான ஒரு செய்தியைக் கம்பன் தனது மகா காவியத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். ஒரு மொழியின் எழுத்துகள் அவைகளின் உச்சரிப்புகள், ஆகியவை அம்மொழிக்கு அடிப்படையான அம்சமாகும். அந்த எழுத்துக்களின் குறிப்பிட்ட வழியிலான சேர்க்கையால் சொற்கள் உருவாகின்றன. அந்தச் சொற்களின் எண்ணிக்கையும் வளமும் செழுமையும் அம்மொழியின் வளர்ச்சி மட்டத்தைக் காட்டுகிறது. மக்களுடைய உழைப்பாலும், ஆழ்ந்த சிந்தனையாலும், அனுபவங்களாலும் பயிற்சியாலும் ஆராய்ச்சியாலும், இதர செயல்பாடுகளின் சிறப்புகளாலும், அந்த மக்களின் மொழியில் இலக்கியங்கள் தோன்றுகின்றன. அப்போது அம்மொழியின் எழுத்துகள், சொற்கள், வாக்கியங்கள், பொருள், இலக்கியம் ஆகியவைகளுக்கு இலக்கணம் வகுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவ்வாறு தமிழ்மொழிக்கு முதன் முதலில் இலக்கணம் வகுத்தது அகத்தியர் பெருமானாகும். அவ்விலக்கணத்திற்கு அகத்தியம் என்று பெயர். இந்த வரலாற்றைக் கம்பர் மிகவும் நுட்பமாகத் தனது மகா காவியத்தில் குறிப்பிடுகிறார். இராம இலக்குவர்கள் பல மலைகளையும் பல மரங்களைக் கொண்ட காடுகளையும், பாறைகளையும், நதிகளையும் அருவிச் சாரல்களையும் சோலைகளையும், இனிய சூழல்களையும் தடாகங்களையும், நீர் நிலைகளையும் கடந்து தண்ட காரண்யத்திற்கு வந்து சேர்ந்தனர். இக்கருத்தைக் கம்பர் தனது வளமான தமிழ்ச் சொற்களில் கூறுகிறார். அது ஒரு இனிய தமிழ்க் கவிதை. “ மலைகளும் மரங்களும் மணிக்கல் பாறையும், அலைபுனல் நதிகளும் அருவிச் சாரலும்,