பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எழுத்தும் சொல்லும் 30 இலைசெறி பழுவமும், இனிய குழலும், நிலைமிகு தடங்களும் இனிது நீங்கினார்”, இவ்வாறு, பல இனிமையான இயற்கைச் சூழல்களையும் தாண்டி இராம இலக்குவர்கள், தாண்டக வனத்திற்கு வந்து அங்கு பல முனிவர்களையும் பெருமைக்குரிய அகத்திய முனிவரையும் சந்தித்தனர். அந்த அகத்திய முனிவர் யார்? அவர், நீண்ட தமிழால் உலகை அளந்தவர், ஒளிமிக்க மழுப்படைகளையும், அழகிய நெற்றியிலிருந்து அக்கினியை சிந்திக் கொண்டிருக்கும் சிவந்த கண்ணையும், தீப்போன்ற ஒளிவடிவத்தையும் கொண்ட சிவபெருமான், தமிழை அகத்தியனுக்குத் தந்தான். அந்த அகத்தியன் சிவன் தந்த தமிழுக்கு இலக்கணம் வகுத்தான். அவ்வகத்தியர் பெருமான் நான்மறைகளையும் (ரிக், யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும்) வருந்திக் கற்றவர். மேலெழுந்தவாரியாக அல்லாமல் ஆழ்ந்து தெளிவாகக் கற்றவர். உலக வழக்குகளை நன்கு அறிந்தவர். சிறந்த இனிய கவிதைகளை இயற்றும் கவித்திறம் மிக்கவர். அத்தகைய ஞானி, சிவனார் தந்த தமிழை நீண்ட பாரம்பரியம் மிக்க பாரத மரபின் வழியில் தமிழுக்குச் சிறந்த இலக்கணத்தை வகுத்தார். அந்த இலக்கண நூலுக்கு அகத்தியம் என்று பெயர். தமிழுக்கு முதன் முதலில் வகுக்கப்பட்ட இலக்கணம் அகத்தியமாகும். இக்கருத்து மிக்க செய்தியை கம்பன் தனது சிறப்பு மிக்க இனிய கவிதையில், “உழக்குமறை நாலினும் உயர்ந்து உலகம் ஒதும், வழக்கினும், மதிக்கவியினும் மரபின் நாடி, நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ்செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்”,