பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f MAKAMA mundo" unvélula a-angsa- - ei forflametit பற்றி ஒரு கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். அந்தக் கட்டுரைப் போட்டி பாரதியின் உரைநடையைப் பிரபலப் படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதற்கு திருநெல்வேலி பல்கலைக் கழகத் தலைவர்களுக்குக் குறிப்பாக அதன் அன்றைய துணை வேந்தருக்கு தமிழகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது. அத்தகைய முயற்சிகளில் இதர பல்கலைக் கழகங்களும் ஈடுபடவேண்டும். அது ஒரு முக்கியமான தமிழ்ப் பணியாகும். - அந்தக் கட்டுரைப் போட்டியில் பாரதியின் உரைநடை மொழி என்னும் தலைப்பில் அடியேனும் ஒரு கட்டுரை (ஆய்வுரை) அனுப்பியிருந்தேன். அக்கட்டுரை சிறப்பாக அமைந்து அப்போட்டியில் முதல் பரிசையும் பெற்றது. அக்கட்டுரை தயாரிப்பதற்கான குறிப்புகளை அண்மையில் நான் எடுத்துப் பார்க்க நேர்ந்தது. அதை வைத்து மேலும் விரிவுபடுத்தி ஒரு சிறு நூல் எழுதி வெளியிடலாம் என்னும் நோக்கில் இந்த நூல் எழுதி முடிக்கப்பட்டது. இந்த நூலில் பாரதியின் உரைநடை, அவர் எழுதியுள்ள கட்டுரைகள், கருத்துரைகள் பற்றிய பல செய்திகளையும் கொண்டு வர முயற்சித்து இந்த நூல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் கட்டுரைகள் அவருடைய உரைநடை, இன்னும் அவருடைய கவிதைகளில் கூட குறிப்பாக விநாயகர் நான்மணிமாலை, புதிய ஆத்திசூடி, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, வாழ்க்கை வரலாறு, பாஞ்சாலி சபதம் மற்றும் பல படைப்புகள் மறுபதிப்புகள் வெளியிடப்பட்டு பிரபலப்படுத்தப் படவேண்டும். அவைகளிலுள்ள சிறந்த கருத்துக்கள் மக்களிடம் விரிவாகச் செல்ல வேண்டும். பாரதியின் கருத்துகள் பலவும் அவருடைய உரைநடை மொழி நடையும் வழிமுறையும் இன்றும் நமக்கு மிகவும் பொருத்தமானதாகும், தேவையானதுமாகும்.