பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எழுத்தும் சொல்லும் 35 காரணமாயிற்று. பண்டைய பாரதத்தில் படிப்படியான சமுதாய வளர்ச்சியில் குறுநில அரசுகளும், பின்னர் சிறுநில அரசுகளும் அடுத்து பெருநில அரசுகளும் பேரரசுகளும் தோன்றி வளர்ந்துள்ளன. இந்த அரசுகளின் தலைமையில் இருந்த மன்னர்கள், சமுதாயத்தின் ஒரு பகுதியாகவும் அரசுகள் கூேடிம நல அரசுகளாகவும், ராஜ நீதியில் கடமைகள் வகுக்கப்பட்டுச் செயல்பட்டனர். பாரத தேசத்தில் 56 பெருநில அரசுகள் இருந்ததாக நமது வரலாறு கூறுகிறது. சில காலங்களில் இந்தப் பெருநில அரசுகளில் சில, பேரரசுகளாக விரிவுப்பட்டும் செயல்பட்டிருக்கின்றன. அவ்வாறு அரசுகள் தோன்றிச் செயல்படத் தொடங்கியபோது, அரசுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய ராஜநீதி சாத்திரங்களும் தர்ம சாத்திரங்களும் தோன்றியுள்ளன. ஒரு அரசன் எவ்வாறு ஆட்சிநடத்த வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிக் கம்பன் தனது மகாகாவியத்தில் பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இராமனுக்குப் பட்டம், ஆட்சிப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது தசரதன் வசிட்டனை அழைத்து இராமனுக்கு இராஜ நீதியை எடுத்துக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறான். அதில்: கம்பன், அரசனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றி தமிழ்ச் சொற்களில் எடுத்துக் கூறுகிறான். அவையெல்லாம் தமிழ் மொழியின் சொற்களஞ்சியதில் சேரும் மணிகளாகும். "யாரொடும் பகை கொள்ளலன், என்னும்போது போர் ஒடுங்கும். புகழ் ஒடுங்காது- கோளும் ஐம்பொறியும் குறையப் பொருள் நாளும் கொண்டு நடுவுறு நோன்மையின் ஆளும் அரசே அரசு. ஆட்சிப் பொறுப்பு என்பது வாளின் மேல்வரும் மாதவம்