பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. augšgth Gentopni 3B என்று இராமன் சுக்கிரீவனுக்கு நல்லுரைகள் கூறியதைக் கம்பர் குறிப்பிடுகிறார். இன்னும் “யாரையும் சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல், மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் சங்கையின்றி உணர்தி'என்றும், "நாயகன் அல்லன் நம்மை நனி பயந்து எடுத்து நல்கும் தாய் என இனிது பேணித் தாங்குதி தாங்குவாரை, ஆயது தன்மையேனும் அறவரம்பு இகவா வண்ணம், தீயன வந்த போது சுடுதியால் தீமையோரை” என்றும் "இறத்தலும் பிறத்தல் தானும், என்பன இரண்டும் யாண்டும், திறத்துளி நோக்கின், செய்த வினை தரத்தெரிந்த அன்றே, புறத்தின் உரைப்பதென்னே! பூவின் மேல் புனிதற்கேனும், அறத்தினது இறுதி வாழ் நாட்டு இறுதி, அஃது உறுதி என்ப" என்று இராம பிரான் மேலும் சுக்கிரீவனுக்கு அரசியல் அறிவுரைகள் கூறுகிறார். இவையெல்லாம் தமிழ் மொழியின் சொற் களஞ்சியத்திற்கு மேலும் வந்து குவியும் சொற்களாகும். அரசியலில் அமைச்சர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. அது பற்றியும் கம்பன் தனது மகாகாவியத்தில் அயோத்தியா காண்டம் மந்திரப்படலத்தில் அமைச்சர்களின் தகுதி திறமை பற்றிக் கூறுகிறார்.

  • உற்றது கொண்டு மேல் வந்து உறு

பொருள் உணரும் கோளார்

  • மற்றது வினையின் வந்தது ஆயினும்

மாற்றல் ஆற்றும் பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவர்

  • அறிய நூலும் கற்றவர்