பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எழுத்தும் சொல்லும் 40 பாரதப் பண்பாட்டின் பாரத நாட்டின் சிந்தனையின் அடிப்படையாக மனிதனுடைய கடமைகளின் பயனிடுகளாக அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் வகுக்கப்பட்டிருக்கின்றன. “கடமையாவன தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல், இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமையெனப்படும். பயன் இதில் நான்காம் அறம், பொருள், இன்பம், வீடு எனும் முறையே தன்னையாளும் சமத்தெனக் கருள்வாய்” என்று பாரதியார் விநாயகர் நான் மணிமாலையில் அந்த ஆனைமுகனை வேண்டுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயனிடுகளே வடமொழியில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறப்படும் புருஷார்த்தங்களாகும். இதுவே பாரத சிந்தனையின் பாரதப் பண்பாட்டின் வாழ்க்கை முறையின் அடிப்படையாகும். அதை அடிப்படையாகக் கொண்டே வள்ளுவப் பேராசான் அறம், பொருள், இன்பம், என்றும் மூன்றையும் எடுத்துக் கொண்டு முப்பாலாகத் தனித்தன்மையோடு தொகுத்து உலகிற்கே பொதுவான மறையைக் கூறியுள்ளார். தர்மம் என்னும் சொல் வடமொழியில் உள்ள ஒரு தனிச் சிறப்பான சொல்லாகும். இந்த சொல்லுக்கு ஈடாக உலகில் எந்த மொழியிலும் ஒரு சொல் இல்லை. இந்திய நாட்டிலுள்ள எல்லா மொழிகளிலும் தர்மம் என்னும் சொல்லே வழங்கப்படுகிறது. தமிழில் மட்டுமே தர்மம் என்னும் சொல்லுக்கு ஈடாக அறம் என்னும் சொல் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தர்மம் என்னும் சொல்லையும் நாம் பயன் படுத்திக் கொள்கிறோம். கம்பனுடைய மகா காவியத்தின் அடிப்படை லட்சியம் அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதை அறிவோம்.