பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை - அ. சீனிவாசன் இப்பணியில் பல சான்றோரும் தமிழ் அறிஞர்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வசதிபடைத்தோர் பலரும் அப்பணிகளுக்கு உதவ வேண்டும். நமது பல்கலைக் கழகங்களும் பதிப்பகங்களும் இதர பல அமைப்புகளும் ஆர்வமுள்ள தனி நபர்களும் அதற்கான திட்டங்களை வகுத்து அவைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ்ப் பாடநூல்களில் பாரதியின் படைப்புகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும். நூல் வெளியீட்டாளர்கள் பாரதி பற்றிய நூல்களுக்கு முக்கிய இடம் தரவேண்டும். இதுவரை பாரதி பற்றி அடியேன் எழுதி வெளியிட்டுள்ள நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பாரதப் பண்பாட்டுதளத்தில் பாரதி, பாரதியின் புதிய ஆத்திசூடி-ஒரு விளக்கவுரை, பாரதியின் தேசியம், ஆழ்வார்களும் பாரதியும் ஆகிய நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பாரதியின் உரைநடைபற்றியும் அதில் வந்துள்ள சீரிய பல கருத்துக்களைப் பற்றியும் மேலும் சில நூல்களும் எழுதலாம் என்றும் தீர்மானித்துள்ளோம். “தமிழ் மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை” என்னும் இந்த நூலுக்கும் உரிய வரவேற்பு அளித்து இந்நூலைப் படித்துப் பயன் பெறவேண்டுகிறேன். இந்நூலைத் தயாரிக்கவும், இதை நல்ல முறையில் அச்சிட்டு வெளியிடவும், ஆதரவு நல்கிய அன்ைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் அ. சீனிவாசன் நூலாசிரியர்