பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இந்தியாவில் அன்னியர் 52 فايتد பாரத நாட்டின் பாரம் பரியமான பழைய சிறந்த கல்விமுறை, பயிற்சி முறை, ஆரம்பக்கல்விக்கான திண்ணைப் பள்ளிக் கூடங்கள், குருகுலங்கள், அடிப்படைக்கல்வி முறை, எழுத்தறிவு, படிப்பறிவு, இலக்கியப் பயிற்சி, வேதப்பயிற்சி முதலியனவெல்லாம் அநேகமாக முற்றிலும் படிப்படியாகச் சிதைந்தன. பழைய பண்டைய விரிவான பல்கலைக் கழகங்களும் உயர் கல்வியும், தனிக் கல்வியும் அறிவியல் கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும், பயிற்சியும் அநேகமாக மறைந்து போயின. பழைய பாரம்பரியமான தனிக்கல்விமுறை, கட்டிடக்கலை சிற்பம், கப்பல் கட்டுதல், நீரியல், நீர்ப்பாசனமுறை, இசை, ஆடல், பாடல், நாட்டியம், வைத்தியம், மருந்தியல், நெசவு, கைவினைத் தொழில் கல்வி முறைகள் பயிற்சி முறைகள் எல்லாம் சிதைவுற்று குடும்பத் தொழில்களாகக் குற்றுயிராக நீடித்தன. அன்னிய ஆட்சியாளர்களின் ஆதரவிலும் நிழலிலும், அவர்களுடைய ஏற்பாட்டிலும் சில கிறிஸ்தவப் பாதிரிமார்களும், கிறிஸ்தவ மதபோதகர்களும் இந்திய நாட்டிற்கு வந்து கடலோரங்களில் தங்கள் மத அமைப்புகளை உருவாக்கியும், மாதா கோவில்களைக் கட்டியும் தங்கள் மதப் பிரச்சாரங்களைத் தொடங்கினார்கள். அச்சு எந்திரங்கள் மூலம் கிறிஸ்தவ மத நூல்களை மொழியாக்கம் செய்தும், அவைகளை தமிழ் மற்றும் வேறு பல இந்திய மொழிகளிலும் வெளியிட்டும் மக்களிடம் பரப்பினர். அப்போது அதையொட்டி தமிழ் மொழியிலும் அந்தத் துறையிலும் உரைநடை தோன்றி வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி, ஆங்கிலேயர் வியாபாரம், போக்குவரத்து (கப்பல் மற்றும் இரயில்வே) ஆங்கிலேயர் ஆட்சி, நிர்வாகம் ஆகியவை மூலம் இந்திய மொழிகளின் உரைநடை, தமிழ் மொழியின் உரைநடை மற்றும் பத்திரிகை, பாட நூல்கள் மூலமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சற்று அதிகமான அளவில் வளர்ச்சி அடையத் தொடங்கியது.