பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PAMAMIM_muondodhuku unnguish a-swsbane - pl. fafanati: 53 பேராசிரியர் பெருந்தகை டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் முதல் தொகுதியில் கட்டுரைக் கலை என்னும் தலைப்பிலான கட்டுரையில், “இவ்வாறு சங்க காலத்தில் அருவியாய்ப் பிறந்து சமய காலத்தில் ஆறாய்ப் பெருகி சமுதாய காலமாகிய கடந்த இருநூறு ஆண்டுகளில் பொதுவாகத் தமிழ் உரைநடையும் சிறப்பாகக் கட்டுரைக் கலையும், கடலாய்ப் பொங்கத் தொடங்கிய காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டேயாகும்” என்று மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இனி தமிழில் உரை நடையையும் கட்டுரைக் கலையையும், கையாண்ட வளர்த்தத் தமிழ்ப்பெரியார்கள் பலரைப் பற்றி தமி ழ்ப் பெரியார் பேராசிரியர் பெருந்தகை டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், சங்கத் தமிழ் வளர்த்தத் தமிழ்த் தாத்தா உ.வெ.சாமிநாதய்யர், மறைமலை அடிகள், தமிழ்ச் சான்றோர் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார், பெருங்கவிஞர் பாரதியார் மற்றும் பல தமிழ் அறிஞர்களையும் பேராசியர் பெருந்தகை குறிப்பிடுகிறார். உரை நடையில், கட்டுரைகள், கருத்துரைகள், கதைகள், நவீனங்கள், ஆராய்ச்சித் தொகுதிகள், ஆய்வு உரைகள், அறிவியல் தொகுதிகள், இலக்கியத் தொகுதிகள் மூலம் இப்பெரியார்கள் தங்கள் கருத்துக்களை மக்களிடையில் எளிய நடையில் பரப்பினார்கள். இப் பெரியார்களில் பலரும், தமிழ் மட்டுமல்ல இதர பல மொழிகளையும், குறிப்பாக வடமொழி (சமஸ்கிருதம்) ஆங்கிலம், பிரஞ்சு முதலிய மொழிகளிலும் வல்லுனர்களாவார்கள். எனவே அவர்களுடைய உரைநடையில் இதர மொழிகளின் தொடர்பும் தாக்கமும் செல்வாக்கும் இருப்பதையும் காணலாம். அதே சமயத்தில் தனித் தமிழுக்கான முயற்சிகளும் நடை பெற்றிருக்கின்றன.