பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அடசினிவாசன் T gblp glomp sieniëffise Ltrăluier e-?II52= 1. தோற்றுவாய் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் மொழியின் வளர்ச்சியில் மகாகவி பாரதியின் கவிதைகளும், உரைநடைக் கட்டுரைகளும் அவைகளில் பொதிந்திருந்த ஆழ்ந்த கருத்துகளும் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருக்கின்றன. இன்று தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கும் விரிவிற்கும் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுக்கும் வேகத்திற்கும் பாரதியே வித்திட்டார் என்று உறுதிபடக் கூறலாம். தமிழ் மொழியும் கவிதையும் பாரதியின் உள்ளத்திலும் உணர்விலும் இணைந்திருந்தன. பாரதிக்கு முன்னர், தமிழ் உரைநடை பிரபலமாக இல்லை. அச்சு எந்திரம் தோன்றிய பின்னர்தான் எல்லா மொழிகளிலும் உரைநடை என்பது பேச்சு நடையிலிருந்து எழுந்து பிரபலமாயிற்று. தமிழ் மொழிக்கும் இந்த நிலை பொருந்தும். இருப்பினும் தமிழ் மொழியில் அந்நாளில் சிறிய அளவில் உரைநடை பழக்கத்தில் இருந்தது. அவை முக்கியமாகக் கீர்த்திகள் பட்டயங்கள் செப்பேடுகள், கல்வெட்டுகள், முதலியவை மூலம் இருந்தன. சில பண்டிதர்கள், மிகவும் கடினமான மொழியில் சிறிய அளவில் உரைநடையில் எழுதினார்கள். மணிப்பிரவாள நடையில் சமயக் கருத்துக்கள் சிலவும் வெளியிடப்பட்டன. பக்தி நூல்களின் பகுதியாகவும் அவை வெளி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் அச்சு எந்திரம் புழக்கத்திற்கு வந்தது. சில கிறிஸ்தவ சபைகள் பைபிள் பகுதிகளை தமிழ் உரைநடையில் அச்சிட்டு வெளியிட்டனர். தமிழ்ப்பெரியார் மறைமலையடிகள் தமிழ்