பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-கிளிவாசன் الهدنفيع தொழில், மற்றும் இதர கிராமத் தொழில் எல்லாம் நசிந்து போயின. அந்த மக்கள் எல்லாம் வேலையிழந்து தொழில் இழந்து குடி பெயர்ந்து பல ஊர்களுக்கும் சென்று வாழ வழியில்லாமல் செத்து மடிந்தார்கள். அன்னிய ஆட்சியின் வரிக் கொடுமைகளையும், ஜப்தி கொள்ளைக் கொடுமைகளையும் தாங்க முடியாமல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி குடி பெயர்ந்தனர். பல கிராமங்கள் காலியாகி விட்டன. கோயில்கள், ஆலயங்கள் எல்லாம் கவனிப்பார் அற்று பூஜைகளும் இல்லாமல் பாழடைந்து போயின. சாதாரண மக்களுடைய வாழ்க்கை சீரழிந்து பஞ்சத்தால், பசி பட்டினியால் குறிப்பாக வட தமிழ் நாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் செத்து மடிந்தார்கள். இவ்வாறு அன்னிய ஆட்சியின் கொடுமைகளாலும், ஆக்கிரமிப்புப் போர்களாலும் மக்கள் எண்ணற்ற துன்ப துயரங்களுக்கு ஆளாகியிருந்தார்கள். ஆடு, மாடுகள், கால்நடைகள் எல்லாம் அழிந்து போயின. மக்களுடைய உடைமைகள் எல்லாம் பறிபோயின. சாகுபடித் தொழில் சரியாக நடைபெறவில்லை. நீர்ப்பாசன முறைகள் (ஏரிகள், குளங்கள், இதர நீர் நிலைகள்) எல்லாம் நிலை குலைந்து கடுமையாகச் சேதப் பட்டிருந்தன. நெசவுத் தொழில் மற்றும் இதர பல கிராமத் தொழில்கள் எல்லாம் சிதைந்து போயின. கோவில் குளங்கள் எல்லாம் சேதப்பட்டுப் போயின. பல கோயில்களில் பூசைகள் கூட நின்று போயின. கல்வி நிலையங்கள், கிராமப் பள்ளிக் கூடங்கள் எல்லாம் செயல் இழந்து போயின. ஆட்சியின் கொடும்ைகள் அதிகரித்து கொண்டேயிருந்தன. அன்னிய ஆட்சியின் கொள்ளை மக்களை மேலும் மேலும் வறுமைக் குழியில் தள்ளிக் கொண்டிருந்தது. கல்வி அறிவு குறைந்து