பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அருள் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 50 மக்களிடம் கண் மூடிப் பழக்க வழக்கங்கள் எல்லாம் அதிகரித்து சமுதாய சீரழிவுகளும் பெருகிக் கொண்டிருந்தன. மக்களுடைய வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்தது. இந்தப் பின்னணியில் மக்கள் மிகவும் அதிகமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த வட தமிழ் நாட்டில் அருட் பெரும் ஜோதியாக வடலூர் இராமலிங்க சுவாமிகள் தோன்றினார். சென்னை நகரிலும் சுற்றுப் புரங்களிலும் அவருடைய செல்வாக்குப் பரவியது. மிகப்பெரிய சமூக சீர்திருத்த வாதியாக வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தமிழகத்தில் தோன்றி அருட்பெரும் ஜோதியாக தனிப் பெரும் கருணையாக விளங்கினார். கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக. என்றும், கண் மூடிப் பழக்கங்கள் எல்லாம் மண் மூடிப் போகட்டும் என்றும், அவர் எழுப்பிய குரல் தமிழகமெங்கும் பரவியது. வள்ளலார் காலத்தில் தமிழ் மொழியில் வடமொழிச் செல்வாக்கும், ஆங்கில மொழிச் செல்வாக்கும் ஊடுருவலும் பரவியிருந்தது. வள்ளலார் தனது கவிதைகள், உரைநடைக் கருத்துரைகள் மூலம் மக்களுக்குத் தலை சிறந்த நல்லுரைகளை வழங்கியுள்ளார். வள்ளலாருடைய திருமுறைகள் தமிழ் இலக்கி -யத்திலும் இலக்கிய வரலாற்றிலும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. அவருடைய ஜீவகாருண்ய ஒழுக்கத்தில், “உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடைய வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். இந்த ஆன்ம லாபம் என்பது பற்றி அவர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.