பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்_உரைநடை-அ-சீனிவாசன் 57 “எல்லா அண்டங்களையும் எல்லாப் புவனங்களையும் எல்லாப் பொருட்களையும் எல்லா ஜீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையும், நமது பூரண இயற்கை விளக்கமாகிய “அருட் சக்தியால்” தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடை படாமல் வாழ்கின்ற ஒப்பற்ற வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம லாபம் என்று உண்மையாக அறிய வேண்டும்” என்று கூறுகிறார். இந்த உரையில் வள்ளலாரின் தத்துவ ஞானக் கருத்துக்களும் கொள்கையும், தமிழும், தமிழ் நடையும் வெளிப்படுகிறது. அவர் அக்காலப் பண்டித நடையில் எழுதவில்லை. சாதாரண மக்களுடைய மொழியிலேயே அவர் சொற் பொழிவுகள் நிகழ்த்திய தமிழிலேயே அவருடைய உரை நடையும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. வள்ளலாருடைய உரைநடைக்கு மற்றொரு எடுத்துக் காட்டாக : “உடுப்பதற்கு வஸ்திரமில்லாமலும் இருப்பதற்கு இட -மில்லாமலும், உழுவதற்கு நிலமில்லாமலும், பொருந்துவதற்கு மனைவியில்லாமலும் விரும்பியபடி செய்வதற்கு பொருள் முதலிய வேறு வேறு கருவிகள் இல்லாமலும் துன்பப்படுகின்ற ஜீவர்கள் விஷயத்தில் ஜீவகாருண்யம் தோன்றி, உடுப்பதற்கு நிறைய வஸ்திரம், இருப்பதற்கு இடம், உழுவதற்கு நிலம், பொருந்துவதற்குப் பெண், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்த போது பெற்றுக் கொண்டவர்களுக்கு உள்ளிருந்து முகத்தினிடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும் கடவுள் கரணத்தில் ஏக தேசமும், ஜீவ கரணத்திற் பூரணமுமாகத் தோன்றுகின்றவையாக உள்ளதால் அது அபர இன்பம் என்று