பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

segang amasuk: பாரதியின்-உரைநடை-அ.-சீனிவாசன் 59 சமயத்திற் கொள்ளுதல் ஜிவஒழுக்கம் என்பதாகும்” என்று குறிப்பிடுகிறார். வள்ளலார் பெருமானின் உரைநடையின் தமிழ், தமிழ்ச் . சொற்கள் அக்காலத்தில் தமிழகத்தில் தமிழ் மொழியில் பழக்கத்தில் இருந்த இதர மொழிச் சொற்கள், அவர் கையாண்டுள்ள சொற்களின் பொருள், கருத்து, கருத்துவடிவம், ஆகியவை உயிரோட்ட முள்ளவைகளாக அமைந்துள்ளன. அவை அக்காலத்தின் மக்கள் நிலையை அறிந்து கொள்ள உதவுகின்றன. தமிழ் மொழியின் உரைநடைக்கும் வள்ளலார் ஆற்றியுள்ள பங்கு மிகவும் முக்கியமானதும், போற்றுதற்குரியதுமாகும்.