பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பாரதியின் உரைநடை மொழி 50 7. பாரதியின் உரைநடை மொழி பாரதியின் உரை நடை மொழியைப் பற்றி, ஆராயுமுன் வரலாறு பூர்வமான பின்னணியைக் கண்டோம். பாரதியின் உரைநடை, வேகமும் உயிர் துடிப்பும் கொண்டிருக்கிறது. உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்று பாரதியே கூறுகிறார் அல்லவா? பாரதியின் உள்ளத்தில் ஒளி வீசியது. பாரத நாட்டில் அன்னியர் ஆட்சி, மக்களின் அடிமை நிலை அவல நிலை, விடுதலைப் போரட்டத்தின் விடிவெள்ளியின் தோற்றம், நாடெங்கும் புதிய ஆதர்சத்தின் தொடக்கம், பாரதியின் கண் முன் பாரதத்தின் பெரு வடிவின் தோற்றம், பாரதத்தின் எதிர் காலச் சிறப்புகளின் மீது நம்பிக்கை இவையெல்லாம் பாரதியின் உள்ளத்தில் ஒளி வீசி, அந்த மகாகவியின் வாக்கிலிருந்து தமிழ்ச் சொற்கள் ஒளி வேகத்தில் புறப்படுகின்றன. பாரதியின் எழுத்துரைகள் பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்தவை. அன்னிய ஆட்சியும் பாரதி காலத்திற்கு முந்திய கால இலக்கியங்களும் அவருடைய பின்னணியாகும். பேராசிரியர் பெருந்தகை டாக்டர் ந.சஞ்சீவியவர்கள் தனது கட்டுரைக் கலை பற்றிய கட்டுரையில் பாரதியாரின் உரைநடை பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதியாரின் அந்தக் கட்டுரைப் பகுதியை பேராசிரியர் பெருந்தகை அவர்களும் மேற்கோள் காட்டியுள்ளார்கள். பாரதியின் அந்தக் கட்டுரைப் பகுதியை முழுமையாகக் காண்போம். அது அவருடைய உரைநடைத் தமி ழுக்கு எடுத்துக் காட்டாக உள்ளதையும் காணலாம். “தமிழா தெய்வத்தை நம்பு, பயப்படாதே! உனக்கு நல்ல காலம் வருகிறது.”