பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

eegang nenneeuw innooien n-enzen- = et definnaar 51 "உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள்” "தெய்வம் கண்ட கவிகள், அற்புதமான சங்கீத வித்வான்கள், கை தேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றியிருக்கிறார்கள், தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்து விட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார். “நமது நாட்டு ஸ்திரீகளிலே பலர் சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி சக்தி, வலிமை, வீரியம், கவிதை, அழகு, மகிழ்ச்சி, நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன. “தமிழா, பயப்படாதே! ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களைப் போட்டு ஜரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமி ழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய். “ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே! ஜாதியிரண்யொழிய வேறில்லை’ என்னும் பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்” “பெண்ணை அடிமையென்று கருதாதே! முற்காலத்துத் தமிழர் மனைவியை வாழ்க்கைத் துணை என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும், பெண்ணும் சமம். “வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களை கேட்டு பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே.