பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_பாதியின்-நைடைமொழி 54 எழுச்சி வேகம், அதில் பாரதியின் கட்டளைகள், ஆகியவைகளை நாம் தெளிவுப்படக் காண முடிகிறது. தமிழ் மொழியின் உரைநடையில் பாரதியின் உரைநடை ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறது. பாரதி ஒரு மகாகவியாகத் தான் அதிகமாகத் தமிழ் மக்கள் கண்டி -ருக்கிறார்கள். பாரதி தமிழ்க் கவிதை உலகிற்கு ஒரு புதிய சகாப்தத்தைப் போலேவே தமிழ் உரைநடைக்கும் ஒரு புதிய திசை வழியைக் காட்டியுள்ளார். பாரதியின் காலத்தில் தமிழ் மொழியின் உரைநடையில் ஏற்கனவே கலந்திருந்த வடமொழிச் சொற்களுடன் ஆங்கில மொழிச் சொற்களின் கலப்பும் சேர்ந்து கொண்டிருந்தது. மக்கள் பேசும் தமிழ் மொழியில் கூட வடமொழிச் சொற்களும், ஆங்கில மொழிச் சொற்களும் கலந்திருந்தன. இன்றும் கூட நகரங்களில் வாழும் மக்களிடையில் குறிப்பாக நடுத்தர மேல் தட்டு மக்களிடையில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். பாரதி தனது தமிழ் உரைடையில் தேவைப்படும் போது பிறமொழிச் சொற்களை குறிப்பாக வடமொழி மற்றும் ஆங்கில மொழிச் சொற்களை எடுத்துக் கொள்ளத் தயங்கவில்லை. ஆயினும் அவருடைய குறிக்கோளாக "இயன்ற வரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வதும் தமிழிலிலேயே செய்வேன்' என்று குறிப்பிடுகிறார். தமிழ் உரை நடைக்கு தமிழ் சிந்தனை அடிப்படை அவசியமானதாகும். எப்பொருளைப் பற்றியும் நாம் பேசவோ, எழுதவோ முயலும் போது தமிழில் சிந்திப்பது என்பது அவசியமானதாகும்.