பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் 2 உரைநடையில் எழுதினார். தமிழுக்கு அவர் செய்த சேவை சிறப்புமிக்கது. அதைத் தொடர்ந்து வேறு சில தமிழ் அறிஞர்களும் தமிழ் உரைநடையில் எழுதத் தொடங்கினர். அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், தனது உயர்ந்த மனிதாபிமானக் கருத்துகளை தமிழ் உரைநடையில் எழுதினார். வள்ளலார் தனது வலுவான கருத்துகளை தமிழ் உரைநடையில் எடுத்துக் கூறினார். எளிய கவிதைகளிலும் தனது கருத்துக்களை வெளியிட்டார். அவருடைய அருட்பா தமிழ் இலக்கியத்தின் தற்கால வரலாற்றில் முக்கிய இடம் பெற்று தமிழக மக்களின் வாழ்க்கையின் பகுதியாக அமைந்திருக்கிறது. கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக. என்றும், கண் மூடிப்பழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போகட்டும் என்றும், பசியைப் போக்கு என்றும் கொலையை நிறுத்து என்றும், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பேசினார். சமரச சன்மார்க்கம் என்னும் ஒரு உயர்ந்த தத்துவத்தை உலகிற்கு அளித்தார். தமிழ் நாட்டின் வரலாற்றில் வள்ளலார் காலம் மிக முக்கியமான காலமாகும். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி பல போர்களிலும் வெற்றி பெற்று இந்தியாவில்-தமிழ்நாட்டில் வலுவாக நிலைபெற்றிருந்தது. அன்னிய ஆட்சியின் கொடுங்கோன்மையின் கீழ் மக்கள் எண்ணற்ற துன்பதுயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலம். அந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதலாக வள்ளலாருடைய தோற்றமும் அவருடைய சன்மார்க்க இயக்கமும் இருந்தது. இலக்கியத் துறையில், தமிழ் இலக்கிய வரலாற்றில் வள்ளலாரின் திருஅருட்பா முக்கியமான இடம் பெற்றது. (வள்ளலார் தமிழ்மொழி மட்டுமே அறிந்தவர்) வள்ளலார் தனது பாக்களிலும் உரைநடையிலும் எளிய முறையில் எளிய தமிழ் நடையில் தனது சமுதாய சீர்திருத்தக் கருத்துகளையும் இலைமறைவு காயாகத் தனது அரசியல் கருத்துக்களையும்