பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பாரதியின் உரைநடைக்கு இன்றும் ஒரு поigивопсо - | 8. பாரதியின் உரைநடைக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு “சிதம்பரம்”என்னும் தலைப்பிலான கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “காலை பத்துமணி இருக்கும் நான் ஸ்நானம் செய்து, பூஜை முடித்து, பழம் தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்டு மேகம் பகற் சந்திரன் நிறங் கொண்டு முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும் நானா விதமாகப் படுத்துக் கிடந்தது. எதிர் வீட்டில் குடியில்லை. அதற்குப் பக்கத்து விட்டில் இருந்து சங்கீத ஒசை வருகிறது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் கேட்கிறது. வண்டிச்சப்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சப்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடை, இடையே குயில், கிளி, புறாக்களின் ஒசை, வாசலிலே காவடி கொண்டு போகும் மணியோசை, தொலையிலிருந்து வரும் கோவிற் சங்கின் நாதம், தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரிகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், “நாராயணா கோபாலா’ என்று ஒரு பிச்சைக்காரனின் சப்தம், நாய் குரைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருவன் ‘ஹீக்கும்” என்று தொண்டையை லேசாக்கி இருமித்திருத்திக் கொள்ளும் சப்தம், தொலைவிலே காய்கறி விற்பவன் சப்தம், “அரிசி, அரிசி” என்று அரிசி விற்றுக் கொண்டு போகிற ஒலி, இப்படிப் பலவிதமான ஒலிகள், ஒன்றன் பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கை தெய்வத்தின் மகா