பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 67 மெளனத்தைச் சுருதியாக்கி என்மனம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது” என்று எழுதுகிறார். இதில் சிறிய சிறிய வாக்கியங்கள் சேர்ந்த பெரிய வாக்கியங்கள் பொருள் பொதிந்த வர்ணனைகள், எளிய நடை, ஒசை, சப்தம், குரல் ஒலி, நாதம், போன்ற இணையான பொருள் கொண்ட பல சொற்கள் முதலியவற்றைக் காண முடிகிறது. தற்கால தமிழ் உரைநடையின் தொடக்கமாக பாரதியின் இந்த உரைநடையை எடுத்துக் கொள்ளலாம். இந்த மரபு சிறந்த வழி காட்டுதலாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. மயிலாப்பூரில் ரீகலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்திய புதிய சமஸ்கிருத கலாசாலையின் க்ருஹப்பிரவேசத்தை ஒட்டி நீதிப்ர விண ரீசுப்பிரமணிய ஐயர், செய்த ஆசி வசனங்களிடையே ராமானுஜா சாரியாருடைய மகிமையைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார். யூரீமான் நீதி மணி ஐயர், பிரம்ம வேதாந்தியாகையால் இவருக்கு த்துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று கட்சியும் சம்மதம். சத்யம் ஒன்று. அதனை ஆராதனை செய்யும் வழிகள் பல. அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கராசாரியரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாக அவருடைய சரித்திரம் சொல்கிறது” என்று நம்பிக்கை என்னும் தலைப்பில் பாரதி எழுதுகிறார். இந்த உரைநடை மணிப் பிரவாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம். "ஆரிய சம்பத்து” என்னும் தலைப்பில் வடமொழி தமிழ் மொழிகளின் சொல்லிணைப்புகளை மற்றும் கருத்தி -ணைப்புகளை பாரதி முன் வைக்கிறார். “ஸம்பத்து” என்பது சம்ஸ்கிருதச் சொல். இதன் பொருள் செல்வம். ஆனால் இங்கு செல்வம் என்பது திரவியத்தையும்,