பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3-பாதியின்-ருைடைக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு EB பூஸ்திதியையும் ஆடுமாடுகளையும் மாத்திரமே குறிப்பிடுவதன்று. 1) அறிவுச் செல்வம், 2) ஒழுக்கச் செல்வம், 3) பொருட் செல்வம்” ஆகிய மூன்றையும் குறிப்பிடும். “ஆர்ய சம்பத்து” என்பது ஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார். கம்பன் தனது காவியத்தில் “சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை விரர் கண்டm' என்று குறிப்பிட்டுள்ளதை பாரதி எடுத்துக் காட்டி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “சவி” என்பது ஒளி, இது வடசொல். கம்பன் காலத்தில் அதிக வழக்கத்தில் இருந்தது போலும். "ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற குழிர்ந்த நடையுடையதாகிய மேலோர் கவிதையைப் போலக் கிடந்த கோதாவரி நதி’ என்று கம்பன் வர்ணனை செய்கிறார், எனவே கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்தநடை” மூன்றும் இருக்க வேண்டும் என்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை என்று பாரதி குறிப்பிட்டு மேலும் தொடர்கிறார். மேலும் நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப் பட்ட நூல்கள், அக்காலத்து பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற பாஷை மாறிக் கொண்டு போகிறது. பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவன் அந்தக்காலத்து ஜனங் -களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடிய பதங்களையே வழங்க