பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 71 அவருடைய தலை சிறந்த மொழி பெயர்ப்புகளில் பல கட்டுரைகளும் தமிழ் உரை நடையில் வெளியாகியுள்ளன. அத்துடன் பாரதியாரின் பகவத்கீதை மொழி பெயர்ப்பு ஒரு தலை சிறந்த மொழியாக்கமாகும். பாரதியாரின் பகவத் கீதை மொழி பெயர்ப்பு நூல் பல லட்சம் பிரதிகள் மக்களிடம் செல்ல வேண்டும். அத்துடன் பகவத்கீதை மொழியாக்க நூலுக்கு பாரதியார் தன்னுடைய முன்னுரை ஒன்றை மிகவும் சிறப்பான கருத்தாழத்துடன் எழுதியிருக்கிறார். அதுவே தலை சிறந்த உரைநடை இலக்கியமாகவும் அமைந்துள்ளது. ஒரு கருத்தை மிகவும் உறுதியாகப் படிப்போர் மனதில் பதியும் படி எடுத்துக் கூறுவதில் பாரதியாரின் உரைநடை, தமிழ் மொழி வளர்ச்சியில் சிறந்த பங்கை ஆற்றியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக “பல நூற்றாண்டு நாம் வாயை மூடிக்கொண்டு அவமானப் பட்டதெல்லாம் ஒன்று சேர்ந்து கடைசியில் அன்னிய ராஜ்யமாகப் பரிணமித்தது. கை எப்போதும் உடம்பில் நோயுள்ள இடத்தைப் போய் தீண்டுவது போலவே நம்முடைய கருத்தை முழுவதும் நம்மை ஆளும் மேற்கு திசையாருடைய ராஜ்ய நெறியில் செல்லுகிறது”என்று பாரதியாரின் மொழியாக்க உரைநடையில் காண்கிறோம்.