பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தமிழ் விழாக்கள் பற்றி 74 10. தமிழ் விழாக்கள் பற்றி ஆந்திர தேசத்தில் போத்தன்னா என்னும் பிரபலமான தெலுங்கு கவிஞர் பாகவதத்தைத் தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார். அந்தக் காவியம் தமிழ்நாட்டில் கம்பராமாயணம் மிகவும் பிரபலமாக இருப்பதைப் போல ஆந்திர தேச மக்களிடையில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அந்த போத்தன்னா மகாகவிக்கு ஜன்ம விழா எடுக்க வேண்டும் என்னும் முயற்சியைப் பாராட்டி, பாரதி , அது போல் தமிழ் நாட்டில் பெரிய கவிஞர்களுக்கும் இதர பெரியார்களுக்கும் விழாக்கள் எடுக்க வேண்டும் என்னும் கருத்தை வெளியிட்டு எழுதியுள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களை கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரர்களுக்கும், கவிஞர்களுக்கும் லோ கோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமாகப் பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஒரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக் காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழங்குவதும் கூடியவரை பின்பற்ற முயலுவதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சக்திமான்களை என்ன வகையில் கணிப்பார்கள்? எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது. பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்து விடப்படும். அறிவுடையோரையும், லோ கோபகாரியையும், விரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும் லோ கோபகாரமும் வீரமும் மங்கிப் போகும். தமிழ் நாட்டில் இப்போது புதிய உயிர்