பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழின் நிலை - 78 11. தமிழின் நிலை தமிழின் நிலை என்னும் தலைப்பில் பாரதியார் தனது உரைநடையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக நாம் ஆற்ற வேண்டிய பல கடமைகளைப் பற்றி விரிவாக விவரித்துக் கட்டுரையாக எழுதியுள்ளார். அக்கட்டுரை பாரதியின் உரைநடைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. அக்கட்டுரையில் அவர் கூறியுள்ள பல கருத்துக்களும் இன்றும் கூட பொருத்த முடையனவாக அமைந்துள்ளன. அக்கட்டுரைப் பகுதி வருமாறு. “கல்கத்தாவில் ஸாகித்ய பரிஷத்'(இலக்கிய சங்கம்) என்றொரு சங்கம் இருக்கிறது. அதைத் தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச்சங்கத்தார் செய்யும் காரியங்களைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் ஒரு விஸ்தீரணமானலிகிதம் எழுதியிருக்கிறார். மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ் சங்கம் முதலிய தமிழ் நாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப் படுகிறார். தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்திரப் பெருங் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ஸாஹித்ய பரிஷத்தின் நோக்கமென்னவென்றால் எல்லாவிதமான உயர்தரப் படிப்புகளும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விட வேண்டும் என்பது. விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார்.