பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழின் நிலை B[] இவர்கள் அத்தனைபேரும் தமிழ்ப் பத்திரிகை வாங்கிப் படிக்க வேண்டும். புத்தக ரூபமாகவும் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும் இவர்கள் எழுதுகிற கதை, காவிய, விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படும் கஷ்டம் சொல்லும் தரமல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீர வேண்டியதிருக்கிறது. வெளியூர்களிலுள்ள ஜனத்தலைவரும் ஆங்கிலப் பண்டித சிகாமணிகளும் தமிழ் பத்திரிகைகளை சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக் காளியங்களையும் அவரவர் மனதில் படும் புது யோஜனைகளையும், தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் சுலபமான காரியம். ஜனத் தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பrத்தில் பிறருக்கு சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்” என்று எழுதுகிறார். பாரதியின் உரைநடை இந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாகவும், எவரும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய முறையிலும் அமைந்திருக்கிறது. இதில் பாரதி தன் காலத்திற்குத் தேவையானதோடு எக்காலத்திற்கும் தேவையான சில சிறந்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்கள். தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சிறந்த பல நடைமுறைக்குச் சாத்தியமான அவசியமான ஆலோசனைகளைக் கூறுகிறார். தமிழ் உரை நடையிலேயே எவ்வாறு சிறந்த கருத்துகளையும், நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான -வைகளையும் எடுத்துக் கூற முடியும் என்பதையும் நாம் இக்கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.