பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் B1 தமிழில் கல்வி கற்பிப்பது, தமிழ் மொழியில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது, தமிழிலேயே படித்தவர்களும் மற்றவர்களும் பேசுவது, உரையாடுவது, சொற்பொழிவுகள் செய்வது, தமிழில் எழுதுவது, பத்திரிகைகளுக்கு எழுதுவது முதலிய பல முயற்சிகளிலும் தமிழ் மொழியைப் பயன் படுத்துவதன் மூலம் தமிழ் வளர்ச்சி ஏற்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறார் பாரதி. பாரதி காலத்திலிருந்து இன்று மொழி வளர்ச்சியில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ் பத்திரிகைகள் அதிகமான அளவில் மாத இதழ்கள் வார இதழ்கள் நாளிதழ்கள் அவைகளின் பதிப்புகளும் விற்பனைகளும் சுற்றுகளும் அதிகரித்துள்ளன. பத்திரிகைகளுக்கும் மக் -களுக்கும் இடையில் தொடர்புகளும் அதிகரித்து வருகின்றன. எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கைகள் அதி -கரித்துள்ளன. தமிழ் நூல்களும் அதிகமான அளவில் வெளி -யிடப்படுகின்றன. தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்று விரிவடைந்து வருகின்றன. பல்கலைக் கழகங்களின் தமிழ் துறைகள் விரிவடைந்துள்ளன. தமிழுக்கென தனிப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இவைகள் எல்லாம் நல்ல பணிகள் ஆற்றி வருகின்றன. தமிழ் பற்றிய பல ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. தமிழ் மொழியின் தொன்மை, செழுமை, வளம் பற்றி வேறு பலரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். பாரத நாட்டின் வேறு பல நகரங்களிலும், உலகின் பல நகரங்களிலும் தமிழ் இலக்கிய அமைப்புகள் உருவாகின்றன. உலகில் சுமார் முப்பது நாடுகளில் தமிழ் மொழி பேசும் மக்களிடம் தமிழார்வம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. தமிழிசை கர்நாடக இசை, தமிழ்ப்பாடல்கள், கீர்த்தனைகள்